தமிழ் விவசாயம் மனிதனின் உயிர்.....!
மொழிகளின் தெய்வமான தமிழ் மொழி அறிந்த அனைத்து உயிர்களுக்கு எனது வணக்கம். விவசாயம் வெறும் உணவு தயாரிக்கும் தொழில் மட்டும் இல்லை என் அருமை தமிழர்களே..! அது நம் உயிர் , வாழ்வு,
பாரம்பரியம், உணர்வு,இசை, மேன்மை அதற்கும் மேலான தெய்வம் நமது தமிழ் விவசாயம்.
என் அருமை தமிழ் சொந்தங்களே .....! நமது மொழியான தமிழும் விவசாயமும் நமது இரு கண்கள் ஏன் என்றால் தமிழார்ந்த விவசாயம் தான் நமது மருத்துவமான சித்த மருத்துவ முறை, என் அருமை தமிழ் சொந்தங்களே நான் இங்கு தமிழில் எழுத ஒரு முக்கிய காரணம் உண்டு,
என்னவென்றால் தமிழ்தான் உலகின் அனைத்து மொழிகளின் தாய், தாய்வழியாக என் விவசாய உக்திகள், மற்றும் தொழிநுட்பம், சித்த மருத்துவம் போன்ற தகவல்களை பகிர்வதால் அனைத்து மொழிகளும் சிறிதளவாவது சென்றடையும் என்று எனது நம்பிக்கை, நம்பிக்கை என்றும் வீண் போகாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து உயிகளுக்கும் பொதுவான ஒரு நூல் என்றால் அது "திருக்குறள்", தமிழ் மொழியின் சிறப்பையும் திருக்குறளின் அருமையையும் உணர்ந்தவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர். தமிழை வளர்ப்போம் நமது தரணி சிறக்க...!
அதுவே நமது தாய் மொழியின் சிறப்பு .....!
அன்புடன் உங்கள் தமிழன்,
செந்தமிழழகன்பன்







கருத்துகள்
கருத்துரையிடுக